Tuesday , October 21 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பால்,பழம்,முட்டை,ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read More »

ஜெகம் டிரஸ்ட்டில் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரையில் வேங்கடாச்சலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை,அக்.29- மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று மெஜூரா கோட்ஸில் பணிபுரிந்த வெங்கடாசலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது துணைவியார் வசந்தா மற்றும் ஆவரது மகன் இந்து …

Read More »

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நடந்த இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை,அக்.29- மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மேத்தா (எ) ரபீக் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார் …

Read More »

மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.

Read More »

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளியை ஒட்டி நவ.9 முதல் 11ம் தேதி வரை சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 5,920 என மொத்தமாக 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு …

Read More »

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார்.அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், 99 ஆயிரத்து, 487 ஆண்களும், ஒரு லட்சத்து, 8,908 பெண்களும், மூன்று திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, 8, 398 வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 570 ஆண்களும், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 980 பெண்களும், 27 திருநங்கைகள் உள்பட, …

Read More »

அண்ணாமலை சொல்கிறார் ஆளுநர் கேட்கிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டம் : அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். வரும் தேர்தலிலும் சிறப்பாக செயல்பட்டு திமுகவை வெற்றியடைய செய்வோம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கவர்னர் கையெழுத்திடவில்லை. கவர்னர் கையெழுத்திட மாட்டார் என பாஜக மாநில தலைவர் …

Read More »

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு

திருப்பத்தூர்: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக எம்.பி.யும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான தயாநிதிமாறன் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; தமிழகத்தில் பொய் சொல்லும் நபர்கள் அதிகமாக உள்ளனர். அது ஆடாக இருந்தாலும் ஆளுநராக …

Read More »

‘நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்’ – குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

‘நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்’ –சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர்திரவுபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் …

Read More »

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜக திட்டம்: கி.வீரமணி

புதுச்சேரி: தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடித்த சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். குலக்கல்வி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES