தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., மற்றும் திரு. இ.எம். சுதர்சன நாச்சியப்பன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி., டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு. இ. எர்ணஸ்ட் பால் தொகுப்புரை நன்றியுரை நிகழ்த்தினர். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.