வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.
அவரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச நிலவரம் குறித்து ஹசீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.வங்கி மோசடி: இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் 20 ஆண்டுகளுக்குப் பின் கைது!
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் நேற்றிரவு ஆலோசனை செய்தனர்.
இந்த நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்திய – வங்கதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் அளித்து வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.