Wednesday , November 19 2025
Breaking News
Home / Politics / “நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்; இது எங்கள் உரிமை!” – ராகுல் காந்தி ஆவேசம்!
MyHoster

“நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்; இது எங்கள் உரிமை!” – ராகுல் காந்தி ஆவேசம்!

Opposition leader Rahul Gandhi reinstated to India's Parliament after  Supreme Court order | PBS News

மீனவ குழுவுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியே வந்து அவர்களை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மீனவப் பிரதிநிதிகள் குழு வந்தது.

ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்புப் பகுதிக்குச் சென்று மீனவ குழுவை சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தி மீனவ குழுவை சந்திக்க வெளியே வந்தபோது செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:

‘நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இது எங்கள் உரிமை. ஆனால் மீனவர் குழுவை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. விவசாயிகள் பற்றி நான் அவையில் பேசியிருந்தேன். மீனவர்களைத் தடுக்கவில்லை என்று அவைத் தலைவர் கூறினார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நான் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES