நம்மை பெண் என்று கேலி செய்த கூட்டம் நம்மை வணங்கி நிற்கும் காலம் இது .வா தங்கையே இழப்பதற்கு ஒன்றுமில்லை வெற்றிபெறுவோம் .
தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தே ஆக வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கை
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீசாரால் படுகொலை செய்த விஷயம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது மக்கள் பிரச்சனையாக ஆனதற்கு காரணம் வணிகர் சங்க அமைப்பு.
ஊத்துக்கோட்டையில் காவல் நிலையத்தில் தன் மகளின் எதிர்காலத்திற்காக நீதி கேட்டு வந்த விவசாயியான தாமரைச்செல்வன் சரளா நியாயம் கிடைக்கவில்லை என்பதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். சென்ற மாதம்.
ஏதேனும் ஒரு நல்ல அமைப்பு அவர்களுடன் துணைநின்று இருந்தால் அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள்.
இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் என் காலனி தேய்ந்து என் பாதம் தேய்ந்து எத்தனையோ உயிர்களை காவல் நிலையம் சென்று காப்பாற்றி உள்ளேன்.
15 ஆண்டுகளாக எந்த விஷயத்திலும் நான் மக்களிடம் வேறுபாடு பார்க்கவில்லை.
ஆனால் இன்று நான் சார்ந்திருக்கும் வன்னியர் சமூகத்தை பழிவாங்கும் அல்லது வெறுப்புணர்வு கொள்ளும் நிலையை நான் அதிகாரிகள் மத்தியில் பார்க்கின்றேன் உணரமுடிகிறது.
இந்த சமூகத்தில் இருந்து அனைத்து மக்களுக்கான பொதுவான ஒரு தலைவர் உருவாகி விடக்கூடாது என்று சில சக்திகள் இயங்குகிறது என்று என்னால் உணர முடிகிறது. வன்னியர் மக்களுக்கு உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்கள் உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது இதற்காக நீதி கேட்டு சென்றால் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை உயிருக்கு பாதுகாப்பு இல்லை உயிரை எடுத்து இருந்தாலும் நீதி கிடைக்கவில்லை.
நான்கு மாதம் கர்ப்பிணி பெண் செய்த தவறு என்ன வட்டாட்சியர் அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மின்பொறியாளர் அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் அவர்கள் தரப்பு கட்டப்பஞ்சாயத்து செய்து நில அபகரிப்பு செய்த கும்பல் மீது புகார் அளித்த ஒரே காரணத்திற்காக நான்கு மாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் வீடு ஏறி வந்து தாக்குதல் நடத்துவது எந்த தைரியத்தில்.
அவர்கள் சட்டத்தை மதித்து புகார் அளித்து நீதிக்காக காத்திருந்ததால.
மேற்கொண்டு நான் நடந்த சம்பவங்களை விவரிக்க விரும்பவில்லை நேர்மையான அரசியல்வாதிகள் மீதும் சில அரசு அதிகாரிகள் மீதும் மக்கள் அவநம்பிக்கை வைத்து விடக்கூடாது என்பதற்காக.
அதிகாரி அதிகாரம் என்று சொல்லி சர்வாதிகாரம் செய்யும் அரசு அதிகாரிகளை ஜனநாயக அமைப்பு நடத்துகின்ற அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களை ஒடுக்க வேண்டும் மக்கள் நலனுக்காக.
பாதிக்கப்பட்ட சுஸ்மிதா என்ற என் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டி 25:10:2021,நாளை காலை 11:30 மணி அளவில் தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை சந்திக்க வருகின்றோம் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கும் வரை ஐயா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உடல் நலம் சரியில்லாத போது ஐயா காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓடோடி வந்து பார்த்த எமக்கு எம் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்கும் வரை ஐயா அவர்களின் சமாதியில் அமர்ந்து காத்திருந்து அண்ணன் ஸ்டாலின் அவர்களை சந்தித்து என் மக்களுக்கு நீதி பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது.
எனவே உறவுகளே
25 .10 .2021 நாளை காலை 11:30 மணிக்கு மெரினாவில் உள்ள ஐயா முத்தமிழறிஞர் அவர்களின் சமாதிக்கு அணிதிரண்டு வாருங்கள் .!!!
கி.வீரலட்சுமி
நிறுவன த்தலைவர் தமிழர் முன்னேற்ற படை .