Wednesday , December 4 2024
Breaking News
Home / கரூர் / நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்  உலக சாதனை விழா
MyHoster

நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்  உலக சாதனை விழா

கரூர் ஏப் 16 கரூர் ஸ்ரீ கவி  இசையாலயம், ஆன்மீக மன்றம் சார்பில் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக  நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்    

உலக சாதனையினை பூரணி முரளிதரன் குழுவினர் நிகழ்த்தினர்.

      உலக சாதனை விழாவிற்கு ஆன்மிக மன்ற தலைவர் எம்.ஏ. ஸ்காட் தங்கவேல்  தலைமை வகித்தார்.

காலை 6 மணிக்கு சிவக்குமார் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சியும், 

கரூர் ருத்ர நடனாலயம் குரு   

துஜான் அண்ணாதுரையின் வரவேற்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

 கரூர் வைஸ்யா வங்கி இயக்குனர் சுதா சூர்ய நாராயணா, டாக்டர் ராஜேஸ்வரி சூரியபிரகாஷ், ஆனந்தி குணசேகர்,உமாமகேஸ்வரி சிவசங்கர், நிர்மலா வெங்கட்ராமன், கீதா நாகராஜன்,வேலம்மாள் பள்ளி முதன்மை தலைமை ஆசிரியர் சாந்தி பார்த்திபன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 

       சென்னை மண்டல இணை ஆணையர் டாக்டர் எஸ். சூர்யபிரகாஷ் தமிழ் இசை, தேசபக்தி, தேவாரம், திருவாசகம்,திருப்பாவை, திருவெம்பாவை, பாரதியார், பாரதிதாசன், சாஸ்திரிய சங்கீதம் என பக்தி பாடல்களை கரூர் ஸ்ரீ கவி இசையாலயம் நிறுவனர் பூரணி முரளிதரன்  குழுவினரின் சாதனை நிகழ்ச்சியினை தொடங்கிவைத்து வாழ்த்திப்பேசும்போது,

கரு உற்பத்தியைத் தொடங்கிய ஊராகவும்  பண்டைய காலத்திலேயே வெளிநாடுகளுக்கு வணிகம் செய்து வந்த ஊராகவும் திகழ்ந்து வருகின்ற கரூர் மண்ணில் இசை நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தும் இந்நிகழ்வினை தொடங்கிவைத்து

 எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

       தொடர்ந்து பக்தி இசை நிகழ்ச்சியை  55க்கும் மேற்பட்டவர்களுடன் பாடி உலக சாதனை நிகழ்த்தி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் டாக்டர் ஜெட்லி  குழுவினர் 6 மணிநேரம் 11 நிமிடம் என மேடையில்  அனைவரது பலத்த கைத்தட்டல் இடையே அறிவிக்கப்பட்டது.

      உலக சாதனை நிகழ்த்திய கரூர் ஸ்ரீ கவி இசையாலயம் நிறுவனர் பூரணி முரளிதரன்,குழுவில் பங்கேற்றவர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் 

ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருதுகளையும்,

 எவர்கிரீன் பவுண்டேசன் சேர்மனும் மூத்த பத்திரிக்கையாளருமான எம்.ஏ.ஸ்காட் தங்கவேலுவுக்கு “சமுதாய ஆர்வலர்” விருதினையும்

கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலி, சென்னை மண்டல இணை ஆணையர் டாக்டர் சூர்யபிரகாஷ், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன்,

ஆகியோர் வழங்கினர். திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

 கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி நீலகண்ட பிரியா அம்பா, ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி திருக்கோவில் குரு முதல்வர் ஓம்சக்தி அருணாசலம் ,ஸ்ரீ கல்யாண காளீஸ்வரி மடாலய மடாதிபதி டாக்டர் வெற்றிக்கனி காளிதாஸ் சுவாமிகள், கருவூர் பசுபதி மடாலய மடாதிபதி ஸ்ரீ பால முருகனார் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தினர்.

    தொடர்ந்து கேரளா மாநில ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலி, சேலம் மதுரை பைபாஸ் சாலை முன்புறம் உள்ள 

ரெங்கமலை மல்லீஸ்வரர் திருக்கோவில் அடிவாரத்தில் பல லட்ச ரூபாய் செலவில் பதினெட்டு சித்தர்கள் நடுவில் மிகப்பெரிய சிவலிங்கம் கொண்ட அலங்கார வலைவினை தனது சொந்த செலவில் அமைத்துத் தந்த கரூர் ஸ்ரீ மாரியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இளங்கோவனுக்கு “தனி ஒருவர் சாதனை” விருதினை வழங்கி வாழ்த்திப் பேசினார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முருகேசன் திருக்கோவில்களில் பக்திப்பாடல்களைப் பாடி ஆன்மீகத்தை வளர்த்து வரும் ஜகநாத ஓதுவார், சாமிநாதன் ஓதுவார்,தண்டபாணி ஓதுவார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கினார்.

கரூர் பசுபதீஸ்வரரா ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட் மண்டபத்தின் தலைவர் வக்கீல் குணசேகர், கரூர் ஆரிய வைசிய சங்க செயலாளர் ஓம்சக்தி முருகானந்தம்,

கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் வெங்கட்ராமன், பொன்னி சண்முகம்,பியூபா புஷ்பராஜன், ஜிபிஆர் சிவசங்கர், ஆனிலை பாலகிருஷ்ணன்,வடக்குப்பாளையம் ஸ்டாலின்,முரளிதரன்,மேலப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் வெண்ணிலா சிவகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கரூர் 

ஸ்ரீ கவியிசை ஆலயம் ஆன்மிக மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

படவிளக்கம்

  டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்  இசை பாடல்களை 6 மணி நேரத்திற்கு மேலாக பாடி உலக சாதனை நிகழ்த்திய ஸ்ரீ கவி இசையாலயம் நிறுவனர் பூரணி முரளிதரனுக்கு கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலி, சென்னை மாநகர இணை இயக்குனர் டாக்டர் சூர்யபிரகாஷ், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் நடுவர் டாக்டர் ஜெட்லி ஆகியோர் வழங்கினர்.அருகில் மேலை பழனியப்பன்,வக்கீல் குணசேகர்,நீலகண்ட பிரியா அம்பா,

சிவசங்கர் மற்றும் பலர்

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES