தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு கள நிகழ்வை தான்தோன்றிமலை நகராட்சி பகுதியில் இன்று நடத்தியது.
பொதுமக்களிடம் நேரில் சென்று தூய்மை ,வீட்டுத்தோட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
நமது மரியாதைக்குரிய கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பு இப்பணியில் இணைந்து கொண்டு ஒருங்கிணைப்பு சேவையைச் செய்தது.
ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ரவிசங்கர் கரூர் மாவட்ட ஸ்கவுட் அமைப்பின் செயலாளராக இருப்பதால் 25 ஸ்கவுட் உறுப்பினர்களை நமது சார்பாகவும் ஸ்கவுட் அமைப்பு சார்பாகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்.
விழிப்புணர்வு களப் பணி முடிந்ததும் ஆணையாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் துணை மேயர் தாரணி சரவணன், மண்டலத் தலைவர் எஸ் பி கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
ஆணையாளர் ,துணை மேயர், மண்டலத் தலைவர் மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு பணியில் பங்கேற்றவர்களையும் நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பையும் பாராட்டி நன்றி கூறினர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன், ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, V.S.சிவகுமார் ஸ்கவுட் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடர்ந்து மாதம் இருமுறை பல பகுதிகளில் நடைபெற இருப்பதால்
ஹெல்ப் 2 ஹெல்ப அமைப்பை சேர்ந்தவர்களையும் சேவை மனப்பான்மை கொண்டவர்களையும் இணைந்து பணியாற்ற ஹெல்ப் 2 ஹெல்ப் வேண்டுகோள் விடுக்கிறது.
Gசிவராமன்,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
ஹெல்ப் 2 ஹெல்ப்.