அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்புத் தாய் சோனியா காந்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களையும் தொண்டர்களையும் புண்படுத்துவதற்காகவும் வேதனைப்படுத்துவதற்காகவும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கெட்ட பாசிச எண்ணத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் நேஷனல் ஹெரால்டு என்ற பொய் வழக்கின் மூலம் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி விட்டு மீண்டும்,அன்னை சோனியா காந்தி அம்மையாரை கடந்த 21-7-2022 அன்று விசாரணை என்ற பெயரில் அழைத்து சுமார் ஐந்து மணி நேரம் அமர வைத்து எந்தவிதமான விசாரணையும் செய்யாமலேயே மீண்டும் இன்று 24-7-2022 அன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகச் சொல்லி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகப் பெரிய துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிற பாசிச மோடி அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் மெய்ஞானமூர்த்தி அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் திரு பேங்க் சுப்பிரமணியம் மற்றும் கரூர் நகர தலைவர் திரு வெங்கடேஷ் ஆகியோர்களின் முன்னிலையில் கரூர் மாநகரின் மாமன்ற உறுப்பினர் திரு ஸ்டீபன் பாபு திருமதி மஞ்சுளா பெரியசாமி துணைத்தலைவர்கள் கோகுலே நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மோடியின் அடக்குமுறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





மனித விடியல்
