Friday , November 22 2024
Breaking News
Home / இந்தியா / காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது…
MyHoster

காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது…

இயற்கையின் வரப்பிரசாதமாக தற்போது காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால் நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பும் லட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் இதை மத்திய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் மேலும் இதன் முன்னோட்டமாக தற்பொழுது வெள்ளியணை அருகிலுள்ள பெரியகுளம் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது இதில் சுமார் 0.60.TMC தண்ணீர் மட்டுமே கொள்ளளவு கொண்டது.

இந்த குளம் நிரம்பினால் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் ஆதாரமும் விவசாய நிலங்களில் உள்ள போர்வெல் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் தற்போது காவிரியில் வீணாக செல்லும் தண்ணீரை மேற்கண்ட வெள்ளியணை குளம் அருகிலேயே திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய் மூலம் இரண்டு லயன் செல்கிறது இதை ஒருநாள் 24 மணி நேரம் குலத்திற்கு முறையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் பொதுப்பணித் துறையும் இணைந்து செயல்படுத்தினால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மட்டுமே செலவாகும். இதை அரசு மூலம் செலுத்தி இதை ஒரு முன்னோட்டமாக செயல்படுத்தி காட்டினால் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நற்பெயர் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


இவன்
என்றும் மக்கள் சேவையில்
என் சுப்பிரமணி தலைவர் வெள்ளியணை ஊராட்சி

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES