குளித்தலை மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் குளித்தலை பெல் தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பாக கடந்த நான்கு வருடங்கள் மூடிக்கிடக்கும் குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ரோடு முதல் உழவர் சந்தை வரை உள்ள அடைக்கப்பட்ட அண்ணாநகர் புறவழிச் சாலை சம்பந்தமாக இன்று 3/3/2020 மீனாட்சி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை பொதுமக்களிடம் பெற்று ஆலோசித்து பாதை திறக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்து கூட்டம் தொடங்கப்பட்டது. ஆலோசனைகள் சிலர் கருத்து கூறினார்கள்.. இந்தப் பாதை சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் மாண்புமிகு எம் ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்துறை அமைச்சர் அவர்களின் சார்பாக வருகை தந்த மதிப்புக்குரிய குளித்தலை அதிமுக நகரச் செயலாளர் சோமு ரவி அவர்களும் மற்றும் குளித்தலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் மதிப்புக்குரிய அமுத வேல் அவர்களும் ஆலோசனை கூட்டத்தில் இந்த பாதை சம்பந்தமாக 30 நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் பாதை திறக்க விரைவான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் விரைந்து திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதனால் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்த சமூக நல அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் 30 நாட்களுக்குள் பாதை திறக்கப்படும் என்ற உறுதியை ஏற்றுக் கொண்டனர்.. வருகின்ற திங்கள்கிழமை நடைபெறவிருந்த நகராட்சி முன்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்…
Home / கரூர் / குளித்தலை – கூட்டத்தில் இந்த பாதை சம்பந்தமாக 30 நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படும்
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …