Thursday , November 21 2024
Breaking News
Home / தமிழகம் / காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
MyHoster

காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

கை கழுவுங்கள் வணக்கம் சொல்லுங்கள்.

காரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் தனி மனித சுகாதாரத்திற்கும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தியது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சித்ரா முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
கரோனா வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகிய தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ளுங்கள். சுகாதாரத் துறை கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவேண்டாம். இருமல் ,தும்மல், சளி, வறண்ட தொண்டை காய்ச்சல் போன்றவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். சமச்சீரான சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தும்மலின் போது மூக்கு, வாயை துணியால் மூடிக் கொள்வது அவசியமாகும். கைகழுவுதலும் மிக அவசியமான ஒன்றாகும்.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை அவசியம் கழுவ வேண்டும்.
வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அதைத் தொட்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்.
வீட்டிலுள்ள பெரியவர்கள் சிறு குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு கை கழுவ வேண்டும்.
ஒவ்வொரு முறை கழிப்பறை சென்று வந்ததும் கை கழுவ வேண்டும்.
இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.
கைகளை குறைந்தது 40 விநாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை கை கழுவ வேண்டும்.
குழாய்த் தண்ணீரில் கைகளை நீட்டிக் கழுவ வேண்டும். அல்லது ஆன்டி செப்டிக் லிக்வைட் சோப்பைப் பயன்படுத்தலாம்.
இரு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். விரல்களை மடக்கி, இடது உள்ளங்கையின் மேல் வலது கை விரல்களை வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும். அதேபோல வலது உள்ளங்கையின் மேல் இடது கை விரல்களை மடக்கி வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும்.இடது கை கட்டை விரல் நுனியை, வலது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்கவும். அதேபோல வலது கை கட்டை விரல் நுனியை, இடது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்க வேண்டும்.
வலது உள்ளங்கையால் இடது புறங்கையைத் தேய்க்கவும்; அதேபோல இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும்.
இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, விரல்களைக் கோர்த்து, விரல் இடுக்குகளைத் தேய்க்க வேண்டும்.
வலது கை விரல்களால் இடது உள்ளங்கையிலும், இடது கை விரல்களால் வலது உள்ளங்கையிலும் சுழற்றிச் சுழற்றித் தேய்க்க வேண்டும்.
இதனால் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். நண்பர்களிடையே கைகொடுப்பதற்கு பதிலாக வணக்கம் சொல்லலாம் என்றார். கிளை நூலக அலுவலர், வாசகர் வட்ட தலைவர், வாசகர்கள் அனைவரும் கைகழுவி, வணக்கம் தெரிவித்து தனிமனித சுகாதாரத்தை பேணி காக்க உறுதி மேற்கொண்டனர்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES