04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
06.04.2020 வரை ரொக்கத்தொகை மட்டுமே வழங்கப்படவிருப்பதால் 07.04.2020 முதல் நியாய விலைக்கடையில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிற்கேற்ப திருத்திய சுழற்சி அட்டவணையிட்டு அதன்படி டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவுள்ள நாள் மற்றும் நேரத்தினை குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும்.
மனித விடியல்