ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் ஏழை எளியோரின் பசியைப் போக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி அதை கடந்த 10 நாட்களாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பலரது பாராட்டுக்கள் மற்றும் நிதியும் கொடுத்து உதவி வருகிறார்கள்.
இதைப்பற்றி திருப்பூர் மாவட்ட *தமிழ்நாடு இளைஞர் கட்சியின் துணை தலைவர் அருண் குமார்* அவர்களிடம் கேட்டபோது நாங்கள் தொடர்ந்து இப்பணியை மக்களுக்கு செய்வோம் என்றும் மற்றும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் திருப்பூர் மாவட்டம் சார்பாக.
இது போன்ற இளைஞர்கள் கண்டிப்பாக நாட்டிற்கு தேவை என்று நினைத்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது என்றும் செயல்பாட்டுக்கு இளைஞர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றும் இன்று உணவு தயாரிக்க நிதி வழங்கிய ஜெயின் பட்டன் ஹவுஸ் மற்றும் ராஜேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு முத்துக்குமார் தெரிவித்தார்.