Friday , July 4 2025
Breaking News
Home / தமிழகம் / டிரைவரை வெட்டி காரை கடத்த முயற்சி…
MyHoster

டிரைவரை வெட்டி காரை கடத்த முயற்சி…

14.09.2021 இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையிலிருந்து TOYOTA ETIOS வாகனம் பயணிகளின் பயன்பாட்டிற்கு உள்ள வாகனம் ஒன்று ஆள் தெரியாத நபர்களால் டிரைவரை வருகின்ற வழியில் வாந்தி வருகின்றது என்று சொல்லி அவரை வாகனத்திலிருந்து வெளியே வர சொல்லி பயங்கர ஆயுதங்களோடு அவரை வெட்ட முயன்றபோது அவர் தப்பித்து பக்கத்திலுள்ள வயல்வெளியில் சென்றுவிட்டார். மீண்டும் 4 பேர் கொண்ட அந்த கும்பல் அவரை வெட்டுவதற்கு கத்தியால் வெட்டும் பொழுது அதைத் தடுக்க முயன்ற பொழுது அந்த கத்தி அவர் கையை கிழித்து விட்டது மேலும் அந்த கும்பல் காரை எடுத்துச் சென்று சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து வாகனத்தின் [G.P.S] டிராக்கிங் சிஸ்டம் துண்டித்துவிட்டு திருச்சி வழியாக தஞ்சாவூர் நோக்கி செல்லும் பொழுது துவாக்குடி வாழவந்தான் டோல்கேட் கடக்கும் பொழுது வாகனத்தின் உரிமையாளருக்கு தகவல் சென்றது அதனடிப்படையில் வண்டியின் செல்லும் பாதை தெரியவந்தது.

மேலும் உடனடியாக தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் அவர்கள் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா மேடத்தை தொடர்பு கொண்ட பொழுது உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரோந்து பணியில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் அந்த இடத்தில் அமர்த்தி அந்த வாகனத்தை மடக்கி பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் அதனடிப்படையில் தஞ்சையின் குறுக்கு சாலையில் கடந்து தஞ்சை அடுத்து பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு அருகில் வாகனம் பிடிபட்டது வாகனத்தில் ஒரு நபரை மட்டும் மடக்கி பிடித்து உள்ளார்கள் மேலும் மூன்று நபர்களை தேடிவருகிறார்கள்.

பட்டுக்கோட்டை D.S.P அவர்கள் தலைமையில் வாகனம் பிடிபட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது மேலும் 3 குற்றவாளிகளை தேடிக் கொண்டு வருகிறார்கள் அதனடிப்படையில் வாகனத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்து வாகனம் ஒப்படைக்க உள்ளது தஞ்சை மாவட்ட “காவல் டுடே” ரிப்போர்ட்டர் R. சுரேஷ் மற்றும் பட்டுக்கோட்டை சேர்ந்த ரிப்போர்ட்டர் V.ராஜா மற்றும் பேராவூரணி சேர்ந்த S.இளையராஜா உடன் உள்ளனர்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES