சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
இந்த கொடூர தாக்குதலில் நிலை குலைந்து போன நிருபர் கார்த்தி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் கார்த்தியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு பொற்பு ஏற்க வேண்டும் , தமிழகத்தில் செய்தியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடந்த வண்ணமாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
எனவே : செய்தியாளர் கார்த்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டறிந்து காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்க பட்ட செய்தியாளர் கார்த்திக்கு உதவி தொகை 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் , பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .