Tuesday , November 25 2025
Breaking News
Home / செய்திகள் (page 29)

செய்திகள்

All News

மதுரையில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் பிறந்தநாள் விழா..!

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் 375 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பி.வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஜயநகர பேரரசு வரலாற்று மீட்பு குழுவின் தலைவர் கே.பி.ஆர்.சென்ராஜ் நாயுடு மற்றும் அனைத்து மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் மணப்பந்தல் எஸ்.கே.ஆர் பாஸ்கர், இந்து கவரா நாயுடு அறக்கட்டளை நிறுவனர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் மண்டல தலைவர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன், விஜயநகர பேரரசு வரலாற்று மீட்பு குழு பொருளாளர் ரெங்கராஜ், மதுரை நாயக்கர் வம்சம் நிறுவனர் ஜே.பி நாயுடு, அகில இந்திய தெலுங்கு சம்மேளன மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தன ர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலாளர் போஸ் நாயுடு மற்றும் அனந்தராமன், கிருஷ்ணராஜ், சிட்கோ சீனிவாசன், சபாஷ் நாயுடு, முத்துராஜா, தங்கப்பாண்டி, பாலகிருஷ்ணன், பிரபு நாயுடு, ஜெகநாதன், பீரோ.செந்தில், வீரராஜ், ராதாகிருஷ்ணன், ஹேமா நாயுடு, சுந்தரேஸ்வரி, தத்து.பெருமாள், பழனி பத்மநாபன், பாஞ்சாலங்குறிச்சி மல்லுச்சாமி நாயக்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கட்டபொம்மன் பேரவை இளைஞர் அணி செயலாளர் உன்னிப்பட்டி நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

`அதிகரிக்கட்டும் பசுமை திருமணங்கள்’ பரிசாக மரக்கன்றுகள் வழங்கி அசத்தும் இளைஞர்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர், யார் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

திருமண நிகழ்வில் மரக்கன்று

பொதுவாக இயற்கை மீது காதல் கொண்டவர்கள் தங்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு வருகை தரும் சுற்றத்தாருக்கு பரிசுப் பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கிஃப்டாக வழங்குவார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞரோ, தனக்கு நேரடி பழக்கம் இல்லாதவர்கள் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருவது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.

கரூர் மாவட்டம், வ.வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் நரேந்திரன் கந்தசாமி. அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, இயற்கையை கட்டமைக்கும் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். அதோடு, தமிழகத்திலேயே முதன்முறையாக தனது ஊரில் உள்ள பொது இடத்தில் இயற்கை முறையில் சமுதாய காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளைந்த காய்கறிகளை கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, தனது பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக நாட்டுரக விதைகளை வழங்கி, வீட்டுத்தோட்டம் அமைக்க வழிவகை செய்தார். இதுபோல், தமிழகத்தில் இயற்கை சார்ந்த ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு விதைகளை வழங்கியிருக்கிறார். இந்நிலையில்தான், அடுத்த முயற்சியாக சமூகவலைதளம் மூலம் தன்னை தொடர்புகொள்பவர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக மரக்கன்றுகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து, நரேந்திரன் கந்தசாமியிடம் பேசியபோது, “எங்கும் பசுமை.. எதிலும் பசுமை… இனியெல்லாம் பசுமை என்ற நோக்கில் பசுமை மாற்றத்தை வ.வேப்பங்குடியில் துவங்கி தமிழகம் முழுதும் விதைத்து வருகிறோம். இதன் அடுத்த கட்டமாகத்தான், என்னைப் பற்றி அறிந்து என்னிடம் கேட்பவர்களின் இல்ல விழாக்களில் வழங்க, மரக்கன்றுகளை எங்கள் பசுமைக்குடி அமைப்பு சார்பாக கொடுக்கத் தொடங்கியிருக்கிறோம்.

கடந்த மே மாதம் 22-ம் தேதி கரூர் மாவட்டம், மணவாசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையான தேன்மொழி இல்ல திருமண விழாவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எழுதியாம்பட்டி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையுமான கலா தம்பதியின் இல்ல திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சியின் நோக்கம், ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்பதோடு, ‘பழமும் பெறுவோம், பணமும் சேமிப்போம்’ என்றெண்ணத்துடன் முடிந்த வரையில் பழவகை மரக்கன்றுகளை அனைத்து நிகழ்வுகளிலும் எங்கள் அமைப்பு சார்பாக வழங்கி வருகிறோம்.

நரேந்திரன் கந்தசாமி

Thanks to Vikatan

தமிழ் பாரம்பரிய மருத்துவர் – பேராசிரியர் Dr.G.தமிழழகன்

தமிழ் பாரம்பரிய மருத்துவர்:36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்:

பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்:

பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் பலகீனம், உடல் பருமன், தைராய்டு ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை சினைப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு அரிப்புகள், புண்கள், இளம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், ருது ஆகாமை, குழந்தையின்மை, மாதவிடாய் நிற்கும் காலப் பிரச்சினைகள், மேலும் (ஆக்சிடென்ட், ஆப்ரேஷன், அபார்ஷன், பிரசவம்) தவிர அனைத்து பெண்களின் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

தீராத பல நாட்பட்ட நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை முற்றிலும் இயற்கை வைத்தியம் பத்தியம் இல்லை:

(ஆக்ஸிடென்ட், ஆப்ரேஷன், அபார்ஷன், பிரசவம்) தவிர பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்:
தலைவலி, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, நரம்பு வலி, பிடிப்பு, தேய்மானம், வீக்கம், பக்கவாதம், முகவாதம், முடக்குவாதம், சரவாங்கி, அடிக்கடி சளி, இருமல், தும்மல், சைனஸ், டான்சில், ஆஸ்துமா, வீசிங், TB, சீரணமின்மை, வயிற்று வலி, வாய்வு, வாய்ப் புண், வயிற்றுப்புண், மரச்சிக்கல், மூலநோய்கள், சர்க்கரை நோய், இதயநோய்கள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இரத்தக்குறைவு, தைராய்டு, உடல் பருமன், உடல் மெலிவு, ஆண்மைக்குறைவு, சிறுநீரகக் கல். தோல் நோய்கள், அல்சர் முதல் கேன்சர் வரை அனைத்து நாட்பட்ட நோய்கள், மூளை வளர்ச்சியின்மை, மன அமைதியின்மை, ஞாபக மறதி, மது அடிமைகள், எதிர்ப்பு சக்தி குறைவு.

பிரதி மாதம் மருத்துவர் வருகை தரும் இடங்கள்:

அரவக்குறிச்சி – (2 to 3 தேதி)
89, புது தெரு, பன்னீர் லேத் பின்புறம், சின்னப்பள்ளி வாசல் அருகில், அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் – 639201

நெய்வேலி நகரம் – (5 to 10 தேதி)
சண்முகா மெடிக்கல், புது குப்பம், ரவுண்டானா வட்டம் – 26, கடலூர் மாவட்டம் – 607803

மேட்டூர் அணை – (1, 4, (11 to 31) தேதி)
ஸ்ரீ விக்னேஷ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம், குஞ்சாண்டியூர், மேட்டூர் அணை – 636404

தமிழ் பாரம்பரிய மருத்துவர்:
36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்
யோகா குரு, பேராசிரியர் Dr.G.தமிழழகன், B.Sc., DNYS, SMP, BEMS, M.D.Acu., Ex-Servicemen.,
இலவச ஆலோசகர், Regd.No. B.A. 22961/TN/28-3-1994
தொடர்புக்கு: டாக்டர் 94434 10495, சென்டர் 90432 10495, 04298-230334

AO அளவிலான தாளில் ஒரு 1-நேரம் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்த 10 வயது மதுரை மாணவன்..!

AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்த 10 வயது மாணவன்.

மதுரையை சேர்ந்த வினோத்குமார் – தமிழரசி தம்பதியரின் மகன் 10 வயதான மகிலன், இவர்
மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்றுள்ளார். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கலாம் பாரம்பரிய கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் மற்றும் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இந்த உலக சாதனை முயற்சியை நேரில் கண்காணித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர் மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், ஆசான் அழகு முருகன் போன்றோர் நேரில் கண்காணித்து உறுதி செய்தனர்.

பின்னர் சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் நினைவு கேடயம் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளை சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் வழங்கி பாராட்டினார்.

உலக சாதனை படைத்த மாணவனை கலாம் பாரம்பரிய கலைக் கழகத்தின் மாணவர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேல் ஆலோசனைப்படி நடைபெற்றது.

அமைப்பின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மாணிக்கராஜ் தலைமையேற்று அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அமைப்பின் சட்டதிட்டங்கள் குறித்தும் புதிதாக அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சமூக சேவைகளை செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி அவர் பேசினார்.

நிகழ்ச்சியை மாநில இளைஞரணி தலைவி எம்.ஜெ ஜீவனா ரோஸ் ஒருங்கிணைத்தார்.

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக 8-ஆம் ஆண்டு மற்றும் மே தின விழா..!

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின விழா ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மடீட்சியா அரங்கத்தில் சங்கத்தலைவர் சி.எம்.மகுடீஸ்வரன் தலைமையிலும், செயலாளர் கே.கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் வரவேற்று பேசினார்.

மேலும் சங்கத்தின் சார்பாக நடந்த கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்,சிறுமி மற்றும் பணியாளர்களுக்கு மண்டலம் -1
உதவி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆ.செல்வம், நகர் நல அலுவலர்
டாக்டர்.வினோத்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்வில் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர் இ.ரா.தமிழ், நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர்
எம்.பஞ்சவர்ணம், மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குரு பார்த்தசாரதி, நிரந்தர ஓட்டுனர் சங்கத் தலைவர் எம்.சரவணன், வருவாய் உதவியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.ஆறுமுகம், துப்பரவு மேற்பார்வையாளர் சங்கத்தின் செயலாளர் கே.கிருஷ்ணன், பொறியியல் பிரிவு சங்கத்தின் முன்னாள் தலைவர் தனசேகரன், மற்றும் உதவி பொறியாளர்கள் ஆர்.சங்கிலி ராஜன், கே.எஸ்.பாஸ்கரபாண்டியன், இளநிலை பொறியாளர்கள்
எஸ்.பாபு, ஏ.முருகன்,என். ரெங்கநாதன்,
பி.காவேரி ரங்கன்,எம்.வீரப்பரணி தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சங்கத் துணைத் தலைவர் எ.துரைராஜ், துணைச் செயலாளர் பி.முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் மாநில தலைவர் இ.சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் பற்றி பேசினார்.

இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சீருடை தைக்கும் பணியினை எப்போதும் போல் சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்கி தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் வாழாவாதாரம் காக்கப்பட வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்ட முடிவில் மாநில துணைச் செயலாளர் திருமதி நிர்மலா தேவி நன்றி கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை..!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர் சுரேஷ்பாபு தலைமையிலும்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப் பூக்கடை கண்ணன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்க மதுரை மாவட்ட தலைவர் எஸ் என் பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் போஸ், பகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிவேல், இளைஞரணி குருபிரசாத், சரவணன், அய்யர் பாலாஜி, மகளிரணி பஞ்சவர்ணம், வார்டு தலைவர்கள் குமரகுரு, கோபால், மொக்கச்சாமி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஆழ்வார்புரத்தில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், ஐ.என்.டி.யூ.சி தமிழக முன்னாள் தலைவருமான கே.எஸ். கோவிந்தராஜன் மற்றும் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலாளர் கே.எஸ்.ஜி குமார் ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, எஸ்.மீர்பாஷா, வீரவாஞ்சிநாதன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் போஸ், மாவட்டத் துணைத் தலைவர் சுப்பையா ஐ.ஓ.பி, வார்டு தலைவர்கள் சரவணராஜ், பாலமுருகன், மொக்கச்சாமி, அப்துல்லா, நாகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் குருபிரசாத், ஷ்யாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை அலங்காநல்லூர் ரோடு பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் லோகநாதன் – தமிழ்செல்வி மற்றும் அவர்களது மகன் பிரவின் மணி ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு குறைந்த விலையில் தரமான டீ,காபி,வடை,பிரட், கேக், பப்ஸ், பிஸ்கட் மற்றும் பிறந்தநாள் கேக் ஆகியவை கிடைக்கும் என உரிமையாளர் லோகநாதன் கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES