அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவனத்தலைவர் ப.ராஜ்குமார் பாண்டியன் சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்.
இதில் நிர்வாகிகள் வழக்கறிஞர் சாமி, திருச்சி சேகர், மதுரை முத்துப்பாண்டி மற்றும் அழகிரி, ரமேஷ் மள்ளர், காளிதாஸ், செம்பூர் ரமேஷ்,மணிபாண்டின், வண்ணை முருகன், உதயகுமார், ஆத்துவழி சுரேஷ், அந்தோணி, வல்லநாடு கந்தன்,நெல்லை காளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி கூறுகையில் :-
ஹார்விப்பட்டியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன்.
மேலும் எனது நீண்ட நாள் கனவு முதியோர் இல்லம் தொடங்கி ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பது என்பதே எனது லட்சியமாக இருந்தது
அந்தக் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. மதுரை முழுவதும் உள்ள ஆதரவற்ற முதியோர்களை எனது இல்லத்தில் சேர்த்து அவர்களை பாசத்துடனும் பரிவுடன் கவனிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரு வாக்குகள் பெற வைத்து வெற்றி பெற வைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
பாஜக ஆட்சியை வீழ்த்துவது குறித்து எல்லா வியூகங்களையும் வகுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைப்படி கலைப்பிரிவு சார்பாக தீவிரமாக செயலாற்றி பணியாற்றுவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, துரைசிங், கார்த்திகேயன் கொண்ட குழு அமைப்பது எனவும், அதுபோல ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் கலைப்பிரிவு சார்பாக குழு அமைத்து கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றவது என முடிவு எடுக்கப்பட்டது என கூறினார்.
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் தேசிய இயக்குனராக சர்க்கார் பட்னவி உள்ளார்.
இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு மற்றும் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பசுமையை காக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் பல்வேறு பகுதிகளில் நட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக மதுரையைச் சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்துள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட முனைவர் பிச்சைவேலுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வரும் 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களிலும், மற்றும் விநியோக நிலையங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மின்சார விநியோக நிலையங்கள் முன்பு வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை குழுவின் மதுரை மண்டல பொதுமக்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள், மீனவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார், செம்மலை,வளர்மதி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவிக்க வேண்டும் என தேர்தல் அறிக்கை குழுவினரிடம் மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனுவை வழங்கினார்.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார்.
மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அனைவருக்கும் சான்றிதழை வழங்கி பேசும்போது :-
பெண்கள் தொழில் முனைவோராக படித்து சான்றிதழ்கள் வாங்கியவுடன் உங்கள் பணி முடியவில்லை. துவக்க நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக மாறும் போது தான் தன்னிறைவு அடைய முடியும் . தைரியம், தன்னம்பிக்கை தொழில் ரகசியம் விற்பனை செய்யும் திறமை, வங்கி கடனை மானியத்துடன் பெற்று தொழிலில் பெருக்க பல்வேறு யுத்திகளை கையாள வேண்டும். பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என பேசினார்.
காவல்துறை ஆய்வாளர் வசந்தா பயிற்சி பெற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பெண்களுக்கான உரிமைகள், கடமைகள், சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்
பொருளாதார ரீதியாக உயர்ந்து வாழ பெண்களுக்கு சுயதொழில் கை கொடுக்கும். ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதை நீங்களும் உறுதி செய்ய வேண்டும் என அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி நகர் நல முதன்மை சுகாதார அலுவலர் டாக்டர்.விநோத் குமார், மாநகராட்சி சமுதாய அலுவலர் பஞ்சவர்ணம், ICICI வங்கி உதவி மேலாளர் சக்திவேல், தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பநல ஆலோசகர் கதிரவன், ஆதரவற்றோர்இல்ல நிர்வாகிகள் இந்திரா,சுசிலா, பயிற்சியாளர்கள் கீர்த்திராஜ், சிபா.மகேஸ்வரி, விஜயவள்ளி, திவ்யா, கார்த்தியாயினி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பேசும்போது :-
பெண்கள் தொழில் முனைவோராக படித்து சான்றிதழ்கள் வாங்கியவுடன் உங்கள் பணி முடியவில்லை. துவக்க நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக மாறும் போது தான் தன்னிறைவு அடைய முடியும் . தைரியம், தன்னம்பிக்கை தொழில் ரகசியம் விற்பனை செய்யும் திறமை, வங்கி கடனை மானியத்துடன் பெற்று தொழிலில் பெருக்க பல்வேறு யுத்திகளை கையாள வேண்டும். பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என பேசினார்.
காவல்துறை ஆய்வாளர் வசந்தி DTP கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு (TNSDC)திறன் மேம்பாட்டு கழகம் சான்றிதழை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.
பொருளாதார ரீதியாக உயர்ந்து வாழ பெண்களுக்கு சுயதொழில் கை கொடுக்கும். ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதை நீங்களும் உறுதி செய்ய வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி நகர் நல சுகாதார அலுவலர் டாக்டர்.விக்னேஷ் குமார், சமுதாய அலுவலர் பஞ்சவர்ணம், (மாநகராட்சி) ICICI வங்கி உதவி மேலாளர் சக்திவேல், தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பநல ஆலோசகர் கதிரவன், கீர்த்திராஜ், சிவா, மகேஸ்வரி, விஜயவள்ளி, திவ்யா, கார்த்தியாயினி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
சென்னை மாவட்டம் அசோக் நகரில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் தில்லைக்கூத்தன் சிலம்ப பாசறையின் ஏற்பாட்டின் பேரில் மாபெரும் சிலம்ப தகுதிப்பட்டை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் (பொறுப்பு) வளசை முத்துராமன் ஜி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அனைவருக்கும் நினைவுப்பரிகளை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டுக்கழக பொதுச்செயலாளர் கலைச்செழியன் முன்னிலை வகித்தார். இதில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கழுகுமனை சுந்தரசோழன், பிரதம பயிற்சியாளர் முத்துக்குமார் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், முகிலன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தில்லைக்கூத்தன் சிலம்ப பாசறையின் ஆசான் பிரபாகரன் நன்றி கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மதுரை மாநகர், உசிலம்பட்டி சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
இந்நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆலோசனைப்படி, அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு கனிமொழி எம்.பி அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது :- உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தென்னை மர விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக தேங்காய் கொப்பரைகளை கொள்முதல் செய்து அதை தேங்காய் எண்ணெயாக மாற்றி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரசே விற்பனை செய்ய வேண்டும்.
தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் விதைகளை வாங்கி விவசாயம் செய்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு ரேடார் கருவி 100 சென்டி மீட்டருக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகள் நஷ்டப்படும் போது அரசு மானியம் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி அவர்களிடம் வழங்கினார்.
மேலும் சென்னை மேயர் பிரியா அவர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.