Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 49)

செய்திகள்

All News

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் சீனிவாசன்,சண்முகம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் குடியரசு தின விழா..!

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் டிரஸ்டி செந்தில்குமரன், பரந்தாமன், தேன்மொழி, சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன் கந்தசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வழக்கறிஞர் திரு. முகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் திருமதி பஜிலா பானு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமை வகித்தார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைமை நிலைய செயலாளர் டி.எம் நாயுடு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இந்து கவரா நாயுடு அறக்கட்டளை தலைவர் பொம்மை பி.ரவிச்சந்திரன் நாயுடு மற்றும் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் குணசேகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மருத்துவ முகாமை அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் துணைத் தலைவர் டாக்டர் சி.எம் கிஷோர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் கே.சி திருமாறன் ஜி மற்றும் டாக்டர் சிட்டிபாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பின்னர் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கும், மஹாலில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தேனி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா, அய்யப்பன், அமைதிப்புயல் ரெங்கராஜ், பெத்தானியாபுரம் நாயுடு சங்க பொருளாளர் ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

என்.டி.சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.

காமராஜர், டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கும் மன்னர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் திருமலை நாயக்கர் ஆகியோர் சிலைகளுக்கும் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மகாலில் உள்ள அவரது சிலைக்கு நிர்வாகிகளுடன் சென்று சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து இன மக்களையும் நேதாஜி சுபாஷ் சேனை கட்சியில் இணைத்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமன் தேவர் ஆகியோரை நிர்வாகிகள் பாராட்டி வருகின்றனர்

இந்நிகழ்வில் களஞ்சியம் முருகன், விஜய்,வேல் மற்றும் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெகநாதன், இளைஞரணி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரூர் MP சகோதரி ஜோதிமணி அவர்கள் முயற்சியால், பஞ்சந்தாங்கி புதூர் மலை கிராமத்தில் மூன்றே மணி நேரத்தில் மின்சாரம்…

5 மாதங்களுக்கு முன்னாள் அய்யலூர் பேரூராட்சி கிழக்கே கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் மலைகிராமங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். ஏழு பெண்கள் குடிநீர் தேவைக்காக அடிபம்பு மூலம் தண்ணீர் பிடித்து கொண்டு MP அவர்களிடம் பெண்களும் ஓடி வந்து மின் பவர் மோட்டார் வைத்து சின்க்டெஸ் வையுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிதி மூலம் கருப்பு சின்டெக்ஸ் மற்றும் மின்பவர் மோட்டார் அமைத்து தருகிறேன் என்றார்கள்.

YouTube player

கூறிய வாக்குபோல் வைத்து எல்லா வேலைகள் முடித்ததும் பெரிய சிக்கல் மின்சாரம் வாங்க நத்தம் செந்துறை மின்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. என்ன செய்வது என்று திரு திருவென்று முழித்த வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், காசிபாளையம் சாமிநாதன் அண்ணா அவர்களிடம் வாட்ஸாப்ப் தகவல் கூறவே, கரூர் MP அவர்களுக்கு தகவல் எட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அக்கா ஜோதிமணி அவர்கள் தொலைபேசி மூலம் பேசியதும், மூன்றே மணி நேரத்தில் கம்பத்தில் மின்சாரம் கொடுத்து போட்டோக்கள், MP அக்கா ஜோதிமணி அவர்கள் வாட்ஸாப்ப் நம்பர்க்கு அனுப்பபட்டது. பஞ்சந்தாங்கி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மின்பவர் மூலம் குடிநீர் வழங்கிய மிக்க மகிழ்ச்சியும் என்றாலும், பின்னோட்டமோ கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் முயற்சியும்தான்.

மூன்றே மணி நேரத்தில் நடந்தது கூடுதல் மகிழ்ச்சி மக்களுக்கு…

இவண்,
வேடசந்தூர் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பு அணி

அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மரக்கன்றுகளை வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது!

உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும்,அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக அதன் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள கேரன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாயிரம் மரக்கன்றுகளை ஆபேல் மூர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூகசேவகர் செல்லப்பாண்டி மற்றும் பள்ளியின் முதல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணவர்களிடையே ஆபேல் மூர்த்தி பேசியதாவது :- புவி வெப்பமாவதை தடுக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அவர் கனவை நனவாக்கும் விதமாக அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக மாணவர்களிடம் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்க உள்ளோம். இந்த மரக்கன்றுகளை பெற்றுச்செல்லும் மாணவர்கள் அதை நட்டு வைத்து தினமும் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாட விடாமல் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். மரத்தை நேசியுங்கள். மரம் உங்களை நேசிக்கும்.

மரங்களை நட்டு வைத்தால் மழை பெறுவது மட்டுமில்லாமல் புவி வெப்பமாவதையும் தடுக்கலாம். எனவே மரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என பேசினார்.

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக பிப்.3 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு…!

வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் பிப்.21 ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சசிகலா தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

செவிலியர்களுக்கு தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக தொடர் இயக்கங்கள் நடத்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து மாநில தலைவர் சசிகலா கூறுகையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல எம்.ஆர்.பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி மற்றும் ஐ.பி.ஹெச்.எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்தின் போது இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கோரிக்கைகள் மற்றும் பணி நியமன நிபந்தனைக்கு மாறாக 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 27/01/2024 முதல் 29/01/2024 வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர் அவர்கள் மக்கள் நல்வாழ்த்துரை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும் 31/01/24 மற்றும் 01/02/2024 ஆகிய இரு தினங்கள் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது என்றும், 03/02/2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், 21/02/2024 அன்று சென்னையில் முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து தோழர்களும் போராட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கோரிக்கையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்

இதில் பொதுச்செயலாளர் சுபின், மாநில பொருளாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், துணைத்தலைவர்கள் விமலாதேவி, அஸ்வினி கிரேஸ், சுதாகரன், ஹேமசந்திரன், வினோதினி,ராகவன் இணைச்செயலாளர்கள் விக்னேஷ், ஜான்பிரிட்டோ, சுஜாதா,பெஜாக்சின், அசோக் மாதவன், சேசுடெல்குயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…!

பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

மதுரை, ஜனவரி.21-

மதுரை மாவட்டம் பரவையில் மேற்கு தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரவை பேரூர் கழகச் செயலாளர் சி.ராஜா மற்றும் பரவை பேரூராட்சி சேர்மன் கலாமீனா ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர் கே .ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வி.பி.ஆர் செல்வகுமார், எம்.எஸ்.கே மல்லன், சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.கே.ரமேஷ், எம்.ஜி.ராமச்சந்திரன், மார்க்கெட் மார்நாடு, விளாங்குடி முத்துமுருகன், பாவலர் ராமச்சந்திரன்,நிரஞ்சன், மாஸ்.மணி, மலர்விழி, சின்னச்சாமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா : சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து..!

மக்கள் நீதி மய்யம் மதுரை தெற்கு தொகுதி நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன், மண்டல அமைப்பாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் பூமிராஜா, சுந்தர், நாகேந்திரன், ஆசைத்தம்பி, பழனிமுருகன்,ரமேஷ், சமயபாண்டி, சித்தன், மணிகண்டன், மதியழகன், தர்மர், தங்கப்பாண்டி,ரமேஷ், செல்லப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அசாருதீன், தவ்லத்பேகம் ஆகியோரை வாழ்த்தினர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES