பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட தலைவி ஸ்ரீநிதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அஜீத்குமார் உள்ளனர்.
சென்னை: சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை இன்று திறந்து வைத்தார். ஆட்டோமொபைல் துறையில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு தற்போது ஐடி துறையிலும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.10.2023) சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (Capitaland) குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Radial IT Park Private Limited), 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) திறந்து வைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், கிராமப்புறங்களை சார்ந்த, படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக, மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உதகமண்டலத்தில் புதுமையான அம்சங்களுடன் ஒரு மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேப்பிட்டாலாண்ட்(Capltaland) குழுமம்: ஆசியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான கேப்பிட்டாலாண்ட் குழுமம், பல நாடுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட சில்லறை வணிகம், அலுவலக வளாகங்கள், தங்குமிடங்கள், வணிகப் பூங்காக்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் தரவு மையங்களை நிறுவியுள்ளது.
முன்னதாக அசென்டாஸ் (Ascendas) என அறியப்பட்ட கேப்பிட்டாலாண்ட், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் முதல் தனியார் தகவல் தொழில்நுட்ப வணிகப் பூங்காவை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் சென்னை தரமணியில் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, செங்கல்பட்டு, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் சைபர்வேல் (CyberVale) மற்றும் சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச தொழில்நுட்ப பூங்கா என மூன்று வணிக பூங்காக்களைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜ, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. இ. கருணாநிதி, திரு.எஸ்.ஆர். ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.மிகுவல் கோ, கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. சஞ்சீவ் தாஸ்குப்தா, இந்திய வணிகப் பூங்காக்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. கவுரி சங்கர் நாகபூஷணம், சென்னை செயல்பாடுகள் தலைவர் திரு. சி. வேலன், மிட்சுபிஷி எஸ்டேட் நிறுவனத்தின் செயல் அலுவலர் திரு. மாசநோரி இவாசே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருடைய மனைவி கலையரசி (35).
இவர் கடந்த 8.4.2021 அன்று செஞ்சியில் உள்ள தன் தாய் வீட்டுக்குக் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.Crime
அப்போது வழியில் கலையரசி தன் குழந்தையின் மருந்து சீட்டை மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதை எடுப்பதற்காக மரகதபுரத்தில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் வழியில் கண்டியமடை என்ற இடத்தில் முத்துக்குமரன், தனது மனைவி கலையரசி மற்றும் குழந்தையையும் கீழே இறக்கிவிட்டுவிட்டு தான் மட்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.மீண்டும் ஒரு கொடூர செயல்… பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கலையரசியை இரும்புக்கம்பியால் தாக்கி விட்டு “உன்னையும், குழந்தையையும் கொன்றுவிடுவேன்” என மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் முனிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்போதைய பா.ஜ.க. நகரச் செயலாளர் அறிவழகன் (41) என்பவரைக் கைது செய்தனர்.பாஜக
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றம் எண் 1-ல் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்புக் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறினார்.
இதையடுத்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அறிவழகன், கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று (அக்.31) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் கூறியதாவது:
மக்களை பாதிக்கும் பல விதமான நோய்களுக்கு அவர்கள் உண்ணும் உணவே மூல காரணமாக உள்ளது. செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து அதில் விளையும் விளைப்பொருட்களின் சத்தும் குறைந்து வருகிறது. இதே போல, மண் வளம் குறைந்ததால் விவசாயிகளுக்கும் மகசூல் குறைந்து வருவாய் குறைந்துள்ளது. மேலும் அவர்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் சந்திக்கும் இதுப் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தீர்வாக அமையும்.மேலும் ஒற்றை பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பலப்பயிர் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்படும்.
மேற்க்கூறிய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியை மண் காப்போம் இயக்கம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் பல்வேறு விதமான இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி இதுவரை சுமார் 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுத்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக, பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா என்ற பெயரில் மாபெரும் விவசாய நிகழ்ச்சி ஒன்றை மதுரையில் நவம்பர் 5-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளோம். யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் தொடங்கி அதை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது வரை பல்வேறு அம்சங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
குறிப்பாக, நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்வது குறித்து பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் பேச உள்ளார். மேலும் இயற்கை சந்தை ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி நடத்தி வருபவர் பல்லடம் விவசாயி திரு. பொன் முத்து. இவர் உருவாக்கியிருக்கும் சந்தையின் மூலம் தற்சமயம் 1000 மேற்பட்ட நுகர்வோருக்கு காய்கறிகள் வழங்கி வருகிறார். ஒரு விவசாயி இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து திரு. பொன் முத்து பேசுவார், பாரம்பரிய காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து காய்கறி வைத்தியர் திரு. அருண் பிரகாஷும், மிளகாய் வத்தல் உற்பத்தி செய்து அமெரிக்க, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திரு. ராமர் அவர்கள் மிளகாய் வத்தல் சாகுபடி குறித்தும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இதுதவிர, முருங்கை இலை மூலம் 2 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி திருமதி. பொன்னரசி உள்ளிட்டோர் வீட்டு தோட்டம், பந்தல் காய்கறிகள் மற்றும் கீரை சாகுபடி என பல்வேறு அம்சங்கள் குறித்தும் பேச உள்ளனர்.
அத்துடன், இதில் நாட்டு காய்கறி விதைகள் மற்றும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நாட்டு காய்கறிகளின் விதைகளை இலவசமாக வழங்க உள்ளோம். விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன் பெறும் விதமாக காய்கறிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைபெறும். மரபு இசை கலைஞர் திரு. சவுண்ட் மணி அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 8300093777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் ஆணைக்கிணங்க, மதுரை மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் வழிகாட்டுதலின்படி வடக்கு மண்டல தலைவர் சாமுவேல் (எ) சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் துணைத் தலைவர் கார்மேகம்,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், இளைஞரணி மண்டல் தலைவர் சிவா, இ.எஸ்.ஐ மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான், பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை.
இராமநாதபுரம்,அக்.30-
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுமன்,மாநில மகளிரணி தலைவி விஜி, மதுரை மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வசவபுரம் கணேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க நிர்வாகி சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.