Sunday , November 23 2025
Breaking News
Home / செய்திகள் (page 67)

செய்திகள்

All News

டில்லியில் காங்., மத்திய தேர்தல் குழு கூட்டம்

புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் காங்., எம்.பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தேர்தலில் மீதமுள்ள வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் வகையில் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. கார்கே விளக்கம்இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரசின் நல்லாட்சியால் சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கொண்ட மாநிலமாக ராஜஸ்தான் மாறியது. இன்று ராஜஸ்தானின் சட்டசபை தேர்தல் குறித்து மத்திய தேர்தல் குழுவின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?” – பாஜக தலைவர்களின் வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதிலடி !

"அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?" - பாஜக தலைவர்களின் வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதிலடி !

தெலங்கானா: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் மோடி உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு :

“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டிலுள்ள அனைத்து கலாச்சாரங்கள், மதங்கள், வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் பாடுபட்டது.

மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே காங்கிரஸின் தொலைநோக்கு பார்வையாக இருக்கிறது. ஆனால், பாஜக – ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் வேறாக இருக்கிறது. நாட்டின் ஒத்துமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் எடுக்க நினைக்கிறது. நாங்கள் இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம். தெலுங்கானாவில் மகத்தான வெற்றியை எங்கள் 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும். நமது பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்று இன்னும் புரியவில்லை. ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. ஆனால் அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

எனது எம்.பி பதவி பா.ஜ.க.வால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரித்தல், சிலிண்டர் விலை குறைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.” என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக பா.ஜ.கவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், “அமித்ஷா மகன் என்ன செய்கிறார். சரியாக சொல்லுங்கள் பார்ப்போம். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார். இதனை நீங்கள் பாஜக தலைவர்களை நோக்கி கேளுங்கள்.” என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்காகவும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவுக்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் கே.எம். சரீப் அறிவுத்தலின்படி, அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜலால் முகமது தலைமையில் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

உடன் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே.மல்லன், கவுன்சிலர் மாணிக்கம், இளைஞர் பாசறை செந்தில்குமார் உள்ளனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சையது யூசுப், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி,மாவட்ட துணைச் செயலாளர் மேத்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாம் உசேன் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

அதிமுக தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே. மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் பரிந்துரையின்படி, தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே.மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க மதுரை மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் அவர்களின் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உடன் நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், உசிலை தவசி, ராஜசேகர், பூக்கடை முருகன், பி.ஆர்.சி மகாலிங்கம், வழக்கறிஞர் முருகராஜ், பி.ஆர்.சி.திருமுருகன், விஜயபாண்டி, பி.ஆர்.சி.சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார், பி.ஆர்.சி.ராஜாராம், விக்னேஷ்வரன், லோகேஷ்,ஆர்.எம்.சேகர், விளாங்குடி முத்துமுருகன்,பாண்டுரங்கன், அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை அலுவலகத்தில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 222 வது ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், 116-வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் நா.சேதுராமன் அவர்களின் தலைமையில், பசும்பொன்னில் நடைபெற உள்ள பிரமாண்டமான அன்னதானத்தை, பசும்பொன்னுக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க வேண்டும் என அழைப்பு விடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதில் மாநில பொதுச்செயலாளர் வி.டி.பாண்டியன், மாநில பொருளாளர் மணிவேல், மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி, பசும்பொன் கலை மன்றம் புரவலர் கோபாலகிருஷ்ணன், மாநில இணை பொதுச் செயலாளர் பிரபு, மாநில இளைஞரணி செயலாளர் பெரியதுரை, மாநிலத் துணைத் தலைவர்கள் தமிழரசன், தர்மராஜன்,பகவதி, தேவர் பேரவை வேலுச்சாமி, நாகராஜ் தேவர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தி.க. ராமசாமி மற்றும் மாநில பொதுச்செயலாளர் தோழர்.பிச்சைவேலு, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர்கள்
கே.எஸ்.மாரியப்பன், என்.வேலாயுதம். பா.சிவக்குமார், கோ.பழனியம்மாள், த.இராமகிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க.ஆனந்தன், இல.விஜயராமலிங்கம்,மாநில செயலாளர்கள்
த.வினோத்ராஜா. வி.கே.ஏ.மனோகரன், சிவ.பழனி, உ.சிங்காரவேல், பி.விஜயன், கே.சந்திர போஸ், அ.சாம் டேனியல் தங்கராஜ் கீதாஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கால அவகாசம் இன்றி, விடுமுறை நாட்களில் புள்ளி விவரங்கள் கோருவதையும், தினசரி காணொலி காட்சி ஆய்வு கூட்டம் நடத்துவதால் ஆய்வு அலுவலர்களின் ஆய்வுப்பணி, மற்றும் செயலாட்சியராக உள்ள சங்கங்களில் கடன் வழங்கல் பணிகளில் தொய்வு ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.

வாட்ஸாப் செயலி மூலம் அரசு அலுவலக கடிதப்போக்குவரத்து நடைபெறுவதும்,
நிர்வாகம் மேற்கொள்வதும் கைவிடப்பட வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல் நோக்கு சேவை
மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் கூட்டுறவு கொள்கைகளுக்கும் சங்கங்களின்
பிரதானமான நோக்கங்களுக்கும் முரணாக பதிவாளர் செயல்பட்டு கூட்டுறவு
நிறுவனங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதை
நிறுத்திட வேண்டும்.

1/10/2023 அன்று அறிவிக்க வேண்டிய துணைப்பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் நாளது தேதி வரை வெளியிடப்படாமல் உள்ளது, குளறுபடிக்கு இடமளிக்காமல் வெளிப்படை தன்மையுடன் உடன் பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மே மாதம் (01.05.2023) கேட்க வேண்டிய முதுநிலை ஆய்வாளர். இளநிலை ஆய்வாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் 5 மாதம் கடந்தும் கேட்கப்படாமல் நிலுவையுள்ளது இது அனைத்துப்பணியாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே உடன் அனைத்து நிலைகளிலும் பதவிஉயர்வு பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பால் கூட்டுறவு பணிக்கு துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கூட்டுறவு துறை அலுவலர்களை தாய் துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும், மேலும் அத்துறையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் மற்றும் மண்டல துணை இயக்குனர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும்.

மேற்படி கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப் படாததைக் கண்டித்து 18/10/2023 அன்று அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் பொதுக்குழு கூட்டம்

தமுமுக மதுரை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி, மண்டல செயலாளர் பக்ருதீன் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரியாஜ் நன்றி கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக பேராடும் பாலஸ்தீன மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பத்திரிக்கை ஊடக துறையினரையும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய அரசுக்கு துணை போகும் ஒன்றிய அரசையும் வன்மையாக இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

2.) 49 சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசின் பரிந்துரையினை கையெழுத்து இடாமல் கால தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அக்டோபர் 28 அன்று சென்னையில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து கிளைகளிருந்தும் வாகனங்கள் அமர்த்தி திரளான மக்களை அழைத்து செல்வதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

3) 84 வது வார்டு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக தென்றல் நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில் மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

4)அனைத்து கிளைகளிலும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவைக்கு அதிகமான பெண் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

5)மதுரை மாநகராட்சி பகுதியில் மஞ்சள் காமாலை, டெங்கு நோய்கள் தீவிரமாக பரவி வருகின்றது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

6) முஸ்லீம் இளைஞர்களை அச்சுறுத்தும் முகமாக NIA சோதனை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை செய்கிறது. குறிப்பாக மதுரையில் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் ஈடுபட்டு பதட்டத்தை உருவாக்குவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள். கலெக்டர்,எம்.பி பாராட்டு.!

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள்

மதுரை,அக்.13-

மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில்
“புத்தகங்கள் வாயிலாக புத்துணர்வு” என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.

இதில் மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 24 மாணவிகள் பங்கேற்று அருமையாக நாட்டியம் மூலம் புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோமதி, துணை முதல்வர் டாக்டர் எஸ்.மஹிமா மற்றும் நடன ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் உள்ளனர்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு SPயாக நியமிக்கபடுகிறார். கரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர்.

கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர் சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES