Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 71)

செய்திகள்

All News

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு

தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு.!

மதுரையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்றதாகவும், இதனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முற்றிலும் தடை செய்ய கோரியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க காவல் ஆணையாளர் மாநில செயலாளர் சுமன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ,

இதில் மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன் அறிவிப்பு

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன்
அறிவிப்பு

மதுரை,செப்.24-

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளை திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து
டாக்பியா மதுரை‌ மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே உள்ள மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023, திங்கள்கிழமை, காலை 11.00 மணியளவில் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம் நடைபெற உள்ளது.

எதற்காக இந்த போராட்டம் என்றால்,தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், சங்கங்கள் அனைத்தையும் பெரும் நட்டத்திற்கு எடுத்துச் செல்லும் MSC/AIF திட்டத்தின்கீழ் அங்கத்தினர்களுக்கு பயணளிக்காத இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கிட வேண்டும் என கட்டாய நெருக்கடி தரும் அரசு மற்றும் கூட்டுறவு துறை நடவடிக்கையை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களின் இந்த அசாதாரண சூழ்நிலையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறியும் வண்ணம் அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக பழங்காநத்தம் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023 அன்று நடைபெறும் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.என தெரிவித்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன், டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம்.!

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே நகர் சுந்தரம் பூங்காவில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.


இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் முன்னிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இருதய நிபுணர்கள் டாக்டர் அண்ணாமலைசாமி மற்றும் டாக்டர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை சி.பி.ஆர் பயிற்சி குறித்தும் செய்து காட்டினர்.

ஆரோக்கிய இருதயத்திற்கான குறிப்புகளும் தரப்பட்டது. முன்னதாக இருதய நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணியில் 150 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் சனத்குமார் நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில்
மாவட்ட ஆட்சியர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் இந்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்தும் அரசு மக்கள் நலத்திட்டங்களை,சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை,தேசிய ஊட்டச்சத்து மாதம் ஆகியவை குறித்த இரண்டு நாட்கள் டிஜிட்டல் மற்றும் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கினார்.

உடன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் தொடங்கி வைத்தனர்.

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை,செப்.22

மதுரை புதூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக உள்ளூர் குளிர்பானங்களை ஆதரித்தும், வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும், உள்ளூர் குளிர்பானங்களை தாங்கள் அருந்தியதோடு பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் சாமுவேல் என்ற சரவணன் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநில செயலாளர்கள் சபரி செல்வம்,குட்டி (எ) அந்தோணி ராஜ், மாநில அமைப்புச் செயலாளர் தங்கராசு, மண்டல நிர்வாகிகள் ஜெயக்குமார் தேனப்பன் கரண்சிங், வாசுதேவன், மரியசுவிட்ராஜன், பிரபாகரன், மண்டல வழக்கறிஞர் அணி கண்ணன், இளைஞர் அணி ஆதிபிரகாஷ், மகளிரணி பாக்கியலட்சுமி ராஜம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் கார்மேகம், மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் நன்றியுரை கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES