அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு, கிருத்திகா பாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ், கரூர் மாவட்டம்.
மதுரை ஞானஒளிவுபுரத்தில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
மதுரை,ஆக.30-
மதுரை ஏ.ஏ.ரோடு ஞானஒளிவுபுரம் ஆர்.சி.மஹால் அருகே செயிண்ட் ஜோசப் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை ராதா டிரான்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் கண்ணன் மற்றும் விஜிலென்ஸ் டி.எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர் முகமது ஷாஜின் வரவேற்றார்.
திறப்பு விழா சலுகையாக பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு வி.பி.ஆர் செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மதுரை,ஆக.30-
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தாயார் ஒச்சம்மாள் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை செல்லூரில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு வி.பி.ஆர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் வட்டக்கழக செயலாளர் பாம்சி.கண்ணன் மற்றும் டாக்டர்.சின்னச்சாமி,ஷேக் அப்துல்லா, விஜயராஜா,கவிஞர் மணிகண்டன், இன்சூரன்ஸ் ராஜா, திவ்யபாரதி,சுமதி உள்ளனர்.
மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரையில் தொடர்ந்து நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்தும், மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி மாவட்ட தலைவர் மீனா இசக்கிமுத்து, இளைஞரணி தலைவர் பாரிராஜா. கூட்டுறவு பிரிவு தலைவர் செந்தில்வேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இதில் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக 50 பேருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது
மதுரை,ஆக.28-
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள கே.பி.எஸ் திருமண மண்டபத்தில் மத்திய அரசு ஜவுளி துறை, கைவினைப் பொருட்கள் துறை மற்றும் பெட்கிராட் சார்பாக ஹேண்ட் எம்பிராய்டரிங் பெண் கைவினை கலைஞர்களுக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையில், கைவினை பொருட்கள் துறை மண்டல இயக்குனர் பிரபாகரன், உதவி இயக்குனர் ரூப்சந்தர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் 50 பேருக்கு இலவச தையல் மிஷின்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் கதர் கிராமத்துறை ஆணையம் மண்டல இயக்குனர் அசோகன், மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், துணை பொது மேலாளர் ஜெயா, பூம்புகார் மேலாளர் மனோகரன், அலுவலர் திருமதி திலகவதி,மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஸ்ரீ சக்ரா நிர்வாக இயக்குனர் சுரேஷ், தங்கப்பல் அழகர்சாமி-லட்சுமி அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் புஷ்பம்சந்திரன், ஏ.பி.குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட்டின்லூதர்கிங், இந்திரா,ஜெயலட்சுமி, சுந்தரமூர்த்தி, ராதா, ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…
மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு M. K. Stalin அவர்கள் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து (25.08.2023) தொடங்கி வைத்தார்.
வடமதுரை பேரூராட்சி தலைவர் திருமதி பரணி கணேசன், வடமதுரை வட்டார கல்வி அலுவலர் திரு நல்லசாமி, தலைமை ஆசிரியர் திரு சந்திரசேகர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வயிறு குடல் கல்லீரல் கணையம் நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர் மற்றும் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை மண்டபம் கரூர் ரோடு அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் கந்தசாமி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு முகமது அலி, அரவக்குறிச்சி காங்கிரஸ் திரு ரயில்வே ராஜேந்திரன் ஆகியோர்களும் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி திரு தமிழ்மணி அவர்கள்.
மேலும் விவரங்களுக்கு 63 838 783 45 (ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர்) என்ற தொலைபேசியில் அழைக்கலாம்.
அதிமுகவில் இணைந்த தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்
மதுரை,ஆக.27-
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சியம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்துல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர்கள் கவிஞர் மணிகண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ்,
மாவட்ட மகளிரணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150 க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன், அதிமுகவில் இணைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்டக்கழக செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் வேடமிட்டு வந்த எம்ஜிஆர் ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் வந்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ரயில் இணையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகி ஆறு பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பின்னர் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் ரயில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை,ஆக.26-
மதுரை ரயில்வே நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகிநர் மேலும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் விபத்தில் காயமடைந்த பயணிகள் விபரங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து ரயில் தீ விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரட்,பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கூறுகையில்:- மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலி ஆகியுள்ளது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்க கூடிய நிகழ்வாக உள்ளது. கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உத்தரவின் பேரில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
ரயில் தீ விபத்தில் பலியான ஒன்பது பேருக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே துறைக்கென்று தனியாக பேரிடர் மேலாண்மை குழு இருக்கிறது. இந்த ரயில் தீ விபத்துக்கு முக்கிய காரணம் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தது தான். இந்த கேஸ் சிலிண்டர்களை எப்படி ரயில்வே போலிஸார் அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாதவாறு ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…