தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எனவே வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துள்ளார்.
Read More »‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் – அரசாணை வெளியீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது. கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது, இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் …
Read More »பூப்பூ நீராட்டு விழாவில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வீராணம்பட்டி திரு ஏழுமலை அவர்கள் எனது மகளின் பூப்பூ நீராட்டு விழாவிற்கு, வருகை தரும் உறவினர்களும், நண்பர்களும் மரக் கன்றுகள் வழங்க வேண்டும் என திரு நரேந்திரன் கந்தசாமி கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவித்தலின்படி ஐயா திரு மு கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற …
Read More »“2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்” : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், ” குழந்தை தொழிலாளர் …
Read More »சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சி சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் …
Read More »பாரத் ஜோடோ நாயகன் திரு. ராகுல் காந்தி (எம்.பி – ரேபரேலி, உத்தரபிரதேசம்) அவர்களின் 54 வது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடும் விழா…19.6.2024
திட்ட அமலாக்கம்: கிரீனரா; கரூர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம்; அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி திட்டத் தலைமை: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம், இந்திய கூட்டணி திட்ட ஆதரவாளர்: பாலா டிரஸ்ட், பசுமைக்குடி திட்ட வழிகாட்டுதல்: செல்வி ஜோதிமணி (எம்.பி – கரூர் தொகுதி) திட்ட கட்டமைப்பு: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) திட்ட இலக்கு: அரவக்குறிச்சியை பசுமையான …
Read More »`அதிகரிக்கட்டும் பசுமை திருமணங்கள்’ பரிசாக மரக்கன்றுகள் வழங்கி அசத்தும் இளைஞர்!
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர், யார் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். பொதுவாக இயற்கை மீது காதல் கொண்டவர்கள் தங்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு வருகை தரும் சுற்றத்தாருக்கு பரிசுப் பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கிஃப்டாக வழங்குவார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் …
Read More »தமிழ் பாரம்பரிய மருத்துவர் – பேராசிரியர் Dr.G.தமிழழகன்
தமிழ் பாரம்பரிய மருத்துவர்:36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்: பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் …
Read More »தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!
தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் …
Read More »“திமுக ஆட்சியில்தான் பெண்கள் மகிழ்ச்சி” – திண்டுக்கல்லில் லியோனி பிரச்சாரம்
திண்டுக்கல்: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கி றார்கள் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி பேசினார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இலவசப் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு கொடுத்து வருகிறார். ஒற்றை …
Read More »