நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது 663 நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள தகவலின் படி எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்துள்ளதாகவும் அதன்படி இரண்டு லிட்டர் விலை குறைப்பு செய்யப்படுவதாகவும் இந்த விலை குறைப்பு மார்ச் 15ஆம் தேதி காலை 6:00 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல் இனி 100.75 பைசாவிற்கு விற்கப்படும் ஒரு லிட்டர் டீசல் 94.24 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் அது 92.34 பைசாவாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல கல்கத்தா மும்பை டெல்லி உள்ளிட்ட நாட்டின் மற்ற நகரங்களிலும் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசாககுறைந்தது. எண்ணெய் நிறுவனங்கள் மலையளவு லாபம் ஈட்டிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக்குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
கடந்த 663 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ள சில தினங்களுக்கு முன்பு இந்த பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.