1. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கப்படும்.
2.அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.
3.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
4. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
5. அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள் / அழகு நிலையங்கள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
6.நகரப் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கு ஏற்ப 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
7. மின்னணு வன்பொருள் (Hardware manufacturers) உற்பத்தி 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
8.கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50% பணியாளர் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
9. கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்ட்வேர் சிமெண்ட் கட்டுமான பொருட்கள் சானிடரிவேர் மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
10.கிராமங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
11.ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் (Agro Processing), தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள் ,ATM, ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்கு தடையுமின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
1.பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
3.திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தளங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
4.அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
5. பொதுமக்களுக்கு விமான, இரயில் பொது பேருந்து போக்குவரத்து.
6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
8. மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.