Monday , December 15 2025
Breaking News
Home / செய்திகள் / பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்.
MyHoster

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தார்

மதுரை,செப்.22

பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் மற்றும் இளைஞரணி பாரி உள்பட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

மேலும் சமீபத்தில் தேமுதிக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் விவேக் விஷ்வா, முருகேசன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

ஏற்கனவே அதிமுகவில் இருந்த ஜெயவேல் வடக்கு மண்டல தலைவராக பலமுறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா குமார், முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், முன்னாள் மேயர் திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES