
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் 3.000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.

இந்நிகழ்விற்கு மாநில செயலாளர் மாரி மறவன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் தொண்டரணி செயலாளர் சந்தோஷ் (எ) குட்டி, ஐடி விங் மாவட்ட செயலாளர் தென்கரைச்செல்வம், தேவர் மர அறுவை மில் ராஜேந்திரன், தமிழ்ச்செல்வம், செல்லக்கண்ணு தேவர், துரைப்பாண்டி, சுப்பிரமணி, ஏ.கே.ஆர்.வி ரமேஷ், செல்வம், சந்திரன், தர்மராஜ், டி.வி.எஸ்.சுரேஷ், பிரின்ஸ் பால்பாண்டி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மணிகண்டன், சிவகொடி, ராஜூவ்பாண்டி, சமுத்திரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.