Breaking News
Home / செய்திகள் / பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கோரிக்கை மனு..!
MyHoster

பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கோரிக்கை மனு..!

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா அவர்களை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது

திமுக தேர்தல் வாக்குறுதியில் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலன் கருதி அதனை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து 72 சதவீதம் எண்ணணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எவர்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிவற்றை ஊக்கப்படுத்தாமல் இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.

இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.20/-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 10 ரூபாயாக குறைந்துவிட்டது. பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணொய், தேங்காய் என்மொய்களை தமிழக அரசும், மத்திய அரசும் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். அரசுக்கு தாங்கள் விவசாயிகளுடைய இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றித்தரும்படி இந்த கூட்டத்தில் மினிட்ஸ் மூலமாக அரசிற்கு தெரியப்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES