Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை
MyHoster

உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பத்திரிக்கைச் செய்தி நகர காவல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.பிரசாத் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய குற்ற எண். 250/21 ச/பி 394 இதசன் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வேலுபாண்டி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனி ஒருவராக விரட்டி பிடித்துள்ளார்.

மேற்படி காவலரை பாராட்டும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா கந்தபுனேனி. இ.கா.ப அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

மேலும் உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் தீர்வு கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் டுடே மற்றும் இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About Admin

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES