Tuesday , October 21 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி..!

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.கே சேதுராமன் தலைமை வகித்தார். இலக்கிய இளந்தென்றல் தீபக் விழா பேருரையாற்றினார். இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் சென்றாய பெருமாள், வெலமநாயுடு மகாஜன சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் …

Read More »

மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிரணியினர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு வினா-விடை புத்தகங்களை சங்கத்தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் மற்றும் செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், டி.எம்.நாயுடு, மதுரை சிங்கம், ரெங்கராஜ், கஜேந்திரன், ராஜாராம், முத்துகண்ணன், டெய்லர் ரங்கராஜ், பாபு, அழகர்ராமானுஜம் மற்றும் …

Read More »

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் …

Read More »

பாலரெங்காபுரத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் டி.எஸ்.கே ஞானேஸ்வரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் …

Read More »

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் வாக்கு சேகரித்தார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து, மதுரையில் இருந்து சென்ற மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் துறையூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இந்நிகழ்வில் அனுப்பானடி சங்கர், மாரிமுத்து, சேதுமாதவன், காளிமுத்து, கர்ணன் …

Read More »

மதுரையில் கடுமையான வெயிலில் மக்களை காக்கும் விதமாக நீர்,மோர் வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள்..!

பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் 100% வாக்கினை பதிவு செய்ய வேண்டும், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என …

Read More »

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நாள்தோறும் நடைபெறும் நற்பணிகளை வாழ்த்தி வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் …

Read More »

பிரதமர் வேட்பாளர் யார் ? ராகுல் காந்தியின் பதில் இது தான்..!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார். பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “கடந்த 2004-ல் செய்தது போல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் யார் …

Read More »

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே …

Read More »

கணக்கில் வந்தது 6000 கோடி – விண்ணைத் தாண்டும் கணக்கில் வராத பணம் : மோடி அரசின் ஊழல் கணக்கு வெளிப்பட்டது!

தனது சொந்த கட்சிக்காககவும், கட்சியின் அதிகாரத்துவத்தினை செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மோடி. அவ்வாறு அவர் தலைமையில், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 முதல் அமலுக்க வந்த தேர்தல் பத்திரம் முறை, சட்டப்படி எவ்வாறு ஊழல் செய்வது என்பதை உலக அரங்கிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகளால், ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணங்கள், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES