Thursday , December 5 2024
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

Read More »

”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அளித்தது காங்கிரஸ்”: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு எப்பொழுது அமலுக்கு வந்தது என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 1951ஆம் ஆண்டு சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. அதை நிறைவேற்றியது …

Read More »

அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. …

Read More »

தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியீடு

டெல்லி: தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது. மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை …

Read More »

நேரு பிறந்தநாள் -டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை.

டெல்லி: நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து …

Read More »

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் மதுரை அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை வண்டியூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் தெற்கு மண்டல அதிகாரி வெங்கடேசன், மதுரை மண்டல அதிகாரி மதுசூதனன், தெற்கு விற்பனை அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சங்கர் சிமெண்ட்டின் சிறப்புகள் குறித்து கட்டிட கலைஞர்களுக்கு …

Read More »

அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஜான்,கவியரசு, மகாலிங்கம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான், தொழிலாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கா.கவியரசு, துணை அமைப்பாளர் தொழிலதிபர் வி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார் மதுரை, நவம்பர்.12- மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு …

Read More »

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பிறந்த நாள் விழா.!

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை வழங்கியும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விழாவில்சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, விஜயராஜா, இன்சூரன்ஸ் ராஜா பாம்சி.கண்ணன், மன்னாதி மன்னன், முருகேசன், கவிஞர்.மணிகண்டன்,வீரமணி பிரபு, ரமேஷ்காந்தி, ஆனந்தமேரி, ராஜேந்திரன், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, திவ்யபாரதி, முத்துமணி, சுமதி, சிவா, திருமாறன், பெயிண்டர் மணி, அழகுசுந்தரம் உள்பட பலர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES