சென்னை: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் தேர்தல பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கி உள்ளது. அதேபோல் மேகா என்ஜினீயரிங் லிட். – ரூ.966 கோடி வழங்கி உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த விவரங்களை வழங்குவதற்கு ஜூன் 30-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த மாரச் 6-ந் தேதி மனு தாக்கல் செய்தது. இதை கடந்த 11-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து விட்டனர். அத்துடன் ஏற்கனவே உத்தரவிட்டபடி, தேர்தல் பத்திர விவரங்களை மறுநாளே அதாவது மார்ச் 12-ந் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டனர். அதன்படி மறுநாள் மாலையில் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
அதில் கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி இருப்பதாகவும் எஸ்பிஐ கூறியிருந்ததுது. இதனிடையே இந்த விவரங்களை 15-ந்தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் நேற்று மாலையில் வெளியிட்டது.
‘பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் 2 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் விவரங்களை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் தேர்தல பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது. இது கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனரான மார்ட்டினின் நிறுவனம் ஆகும். அதேபோல் மேகா என்ஜினீயரிங் லிட். – ரூ.966 கோடி வழங்கி உள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்..
இடி, ஐடி ரெய்டு மூலம்..பணம் பறித்த பாஜக! தேர்தல் பத்திரத்தை பாருங்க தெரியுது! பாயிண்டை பிடித்த காங்.
பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் – ரூ.1,368 கோடி
மேகா என்ஜினீயரிங் லிட். – ரூ.966 கோடி
குவிக் சப்ளை செயின் லிட். – ரூ.410 கோடி
வேதாந்தா நிறுவனம் – ரூ.400 கோடி
ஹால்டியா – ரூ.377 கோடி
பாரதி குழுமம் – ரூ.247 கோடி
எஸ்செல் மைனிங் – ரூ.224 கோடி
வெஸ்டர்ன் யுபி பவர் – ரூ.220 கோடி
கெவன்டர் புட்பார்க் – ரூ.194 கோடி
மதன்லால் லிட் – ரூ.185 கோடி
டி.எல்.எப். குழுமம் – ரூ.170 கோடி
யசோதா ஆஸ்பத்திரி – ரூ.162 கோடி
உட்கல் அலுமினியா – ரூ.145.3 கோடி
ஜிண்டால் ஸ்டீல் – ரூ.123 கோடி
பிர்லா கார்பன் – ரூ.105 கோடி
ரங்டா சன்ஸ் – ரூ.100 கோடி
டாக்டர் ரெட்டிஸ் – ரூ.80 கோடி
பிரமல் என்டர்பிரைசஸ் – ரூ.60 கோடி
நவயுகா என்ஜினீயரிங் – ரூ.55 கோடி
ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல் – ரூ.40 கோடி
ஈடில்வெயிஸ் குழுமம் – ரூ.40 கோடி
சிப்லா லிட் – ரூ.39.20 கோடி
லட்சுமி மிட்டல் – ரூ.35 கோடி
தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் – ரூ.33 கோடி
ஜிண்டால் ஸ்ெடயின்லெஸ் – ரூ.30 கோடி
பஜாஜ் ஆட்டோ – ரூ.25 கோடி
சன் பார்மா – ரூ.25 கோடி
மேன்கைண்ட் பார்மா – ரூ.24 கோடி
பஜாஜ் பைனான்ஸ் – ரூ.20 கோடி
மாருதி சுசுகி இண்டியா – ரூ.20 கோடி
அல்ட்ராடெக் – ரூ.15 கோடி
டிவிஎஸ் மோட்டார்ஸ் – ரூ.10 கோடி