Tuesday , October 21 2025
Breaking News
Home / Politics / கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…
MyHoster

கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…

கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை.

இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சிறப்பாக கொண்டாடினர். செல்வத்துரையை பள்ளிக்கு அழைத்து வந்து அவரிடம் வாழ்த்து பெற்றனர் . அவரது குடும்பத்தினரையும் கௌரவித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

திருப்பூரில் வசித்து வந்த செல்வதுரை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததை அடுத்து முன்னாள் மாணவர்கள் உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

சவப்பெட்டி செய்கிறவர் கூட ‘ஐயோ போய்விட்டாரே ‘ என்று கண்ணீருடன் கலங்கும் வகையில் வாழ்வதுதான் உயரிய வாழ்க்கை. அப்படி வாழ்ந்தவர் நமது ஆசான்.

கண்ணீருடன் புகழஞ்சலி என்று முன்னாள் மாணவரும் மற்றும் Help2Help அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான, மூத்த பத்திரிக்கையாளர் திரு. சிவராமன் அவர்கள் தெரிவித்தார்.

About Admin

Check Also

தீபாவளிக்காக, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இருப்பு வைத்து, விற்பதற்காக 24 மணி நேரமும் பார்களை நடத்தும் தமிழ்நாடு அரசு

தீபாவளிக்காக, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இருப்பு வைத்து, விற்பதற்காக 24 மணி நேரமும் பார்களை நடத்தும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES