Saturday , April 26 2025
Breaking News
Home / தமிழகம் / தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28 நபர்களுக்கு பயிற்சி
MyHoster

தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28 நபர்களுக்கு பயிற்சி

மிக சிறந்த எங்கள் தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர் ஒரு மின்தடை என்றால் உடனே வந்து சீர் செய்யும் சிறந்த பணியாளர்…………….
இவருடைய தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28நபர்களுக்கு பயிற்சி தந்தார் ஒரே ஒரு ரூபாய் கூட இதற்காக சன்மானம் வாங்கவில்லை மாறாக அனைவருக்கும் டீ, சாப்பாடு என்று இவர் செலவுதான் அதன் பயனாக 23நபர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் உடல் தகுதி தேர்வில் வெற்றி …….

பல பணிகளுக்கு இடையே இந்த மாதிரியான பொது சேவைகள் செய்யும் சிறந்த பணியாளர்களுக்கு இந்த அரசு ஏதாவது ஊக்குவித்து கைவுரப்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்

ஒரு நடிகர் திரையில் நடித்தால் கொண்டாடும் நாம் இந்த நிஜ ஹீரோகளை மறப்பது வருத்தம் அளிக்கிறது

எனக்கு தெரிந்த எங்கள் பகுதியில் மின்சார வாரியத்தில் எவரும் இப்படி பணி செய்தது இல்லை

இந்த பாபுஜி யின் பணியாளர் அய்யர்மலை வடக்கு மின்சார வாரியம் என்ற வாட்சாப் குழுவை உருவாக்கி அவர் பகுதியில் மின்சாரம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பொது மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் அதில் பதிவிடப்படும் மின்சார குறைபாடுகளை குறிப்பிட்ட நாட்களில் முடித்து விடுகிறார்கள் மின் தடையை பற்றி மிக துல்லியமாக விளக்கம் தருகிறார் எந்த நேரத்திலும் அழைத்தாலும் மிகவும் அக்கறையுடன் கனிவுடன் பதில் தருகிறார் இவருடைய இந்த செயல்பாடுகள் மிக அதிகமாக உள்ளது
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை இளைஞர் குரலில் அடையாளபடுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES