பேரளி டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது.
நேற்று முதல் பேரளி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சமூக வலைதளம் மூலமாக அனைவருக்கும் கோரிக்கை வைத்தோம்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் திங்கள்கிழமை கடிதம் கொடுத்து டோல்கேட்டை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கடிதம் எழுதும் பணியில் இருந்தேன்.
இந்த நிலையில் இன்று காலை வாகன ஓட்டிகள் பேரளி டோல்கேட்டை முற்றுகையிட்டு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தின் எதிரொலியாக கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஓட்டுநர்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
நிறுத்தியது நிரந்தரமாக நிறுத்தியதுவாகவே இருக்கட்டும். இருக்கின்ற டோல்கேட்டை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அதற்காக தொகுதி எம் எல் ஏக்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமக்கான உரிமையை நாம் போராடித்தான் பெற வேண்டும். சட்டரீதியாக பேரளி டோல்கேட்டை முழுமையாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவது மூலமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

அன்புடன்
நானும் உங்கள் தோழன்
வெண்மணி வரதராஜன்
பெரம்பலூர் மாவட்டம்.