இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களிடம் அரசு பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine)&அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க கேட்டுக்கொண்டேன்.
பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவியர்களிடையே, மாணவர்களை காட்டிலும் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு வர இயலாமைக்கு மாதவிடாய் குறித்த புரிதலின்மையும் அக்காலங்களில் ஆதரவில்லாததும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் தங்கள் பள்ளி படிப்பு நாட்களில் 10-20% விழுக்காடு வரை இதனால் இழப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் பெரும்பாலாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவியர்களுக்கு நாப்கின் உள்ளிட்ட சுகாதார சாதனங்கள் எளிதில் கிடைப்பதில்லை.
இதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கும் அபாயம் இருப்பதுடன் அவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. எனவே, அரசு பள்ளிகளில் குறிப்பாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் அவசியத் தேவையாகிறது.
ஜோதிமணி, MP, கரூர் மாவட்டம்.
