Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 66)

செய்திகள்

All News

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று ஆயுத பூஜை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தாங்கள் தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

அந்த வகையில் மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணிகண்டன், இன்சூரன்ஸ் ராஜா, செல்வம், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, மன்னாதி மன்னன், கவிஞர் மணிகண்டன், சுமதி, திவ்யபாரதி, முத்துமணி ஜெயபாண்டி, எம்.எஸ்.மாறன், இயக்குனர் வீரமணிபிரபு, ரமேஷ்காந்தி மற்றும் மதுரை கால் டாக்சி அசோசியேட் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் கல்வி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி, டைப்ரைட்டிங் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.

இவரின் தன்னலமற்ற பொது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்,அக்.22-

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார்.


நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு இலவச கல்வி அளிப்பது, கல்வி அளிப்பது, மகளிருக்கு சுயசார்பு தொழில் முனைவு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, சட்ட உதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகள் நியமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி தலைவர் வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம். கல்வி குழுமத் தலைவர் சங்கர், நாமக்கல் மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் குழந்தைவேல், காரைக்கால் ராகவேந்திரா கல்வி குழுமத் தலைவர் இளங்கோ, ஈரோடு நுாட்பாலை உரிமையாளர் அருண், டாக்டர்கள் பழனியப்பன், ராஜவேல், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கற்பக ரத்னபிரியா, அபுதாபி தமிழ்சங்க நிர்வாகி சிவக்குமார், திருப்பூர் நெசவு தொழிற்காலை உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்….

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது. வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அப்போதும் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்ததால், நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், 5 நிமிடங்களுக்கு முன்பாக, இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து, அதனை அறிவித்தது.

“விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விண்கலம் பகுதிக்குச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் சோதனை வாகனத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்களில் தொடங்கப்பட்டது. அப்போது சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். திட்ட இயக்குநர் எஸ். சிவகுமாரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இஸ்ரே தலைவர் சோமநாத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் குறிப்பிட்டார். இதையடுத்துப் பேசிய எஸ். சிவகுமார், தாங்கள் மேற்கொண்ட தொடர் உழைப்புக்கு இன்று பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கலை வளர்மணி செ. நாகேஸ்வரன் வரவேற்பு வழங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாடக நடிகர் குண்டுசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை கோச்சடையில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பணியிட மாறுதல்களை பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த வேண்டும்.

நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மாநகர சுகாதார செவிலியர்களை பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

பணி ஓய்வு பெறும் நாளில் பண பயன்களை வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
நிர்வாகிகள் பேசினர்.

இந்நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி துரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.


மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பரமசிவன், ராஜூ, பாண்டிச்செல்வி, ரவிச்சந்திரன், பரமேஸ்வரி, இரா.தமிழ், கிருஷ்ணன் சின்னப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன் நிறைவுறை கூறினார்.

இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.நீலாராம் – கே.என்.கீதா சஷ்டிய பூர்த்தி விழா

மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே ஆர் நீலாராம் – கே.என்.கீதா ஆகியோர் சஷ்டிய பூர்த்தி விழா மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள மதன கோபாலசாமி கோவிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய தொகுதி மாவட்ட செயலாளர் வி.பி.மணி, வடக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அயூப்கான் உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கேட்ட வரம் கொடுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பெருமாள் சுவாமி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளது ஜோதிமாணிக்கம் பெருமாள் கோவில். இந்த கோவில் 1.000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மேலும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் கவரா நாயுடு பங்காளிகள் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மாதா மாதம் ஏகாதசி மற்றும் பௌர்ணமி அன்று பங்காளிகள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டி சென்றால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம்
T.சுப்புலாபுரம், திம்மராசநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, பொம்மிநாயக்கன் பட்டி, சேடப்பட்டி, ரெங்கசாமிப்பட்டி, மதுரை,திருப்பூர் போன்ற ஊர்களை சேர்ந்த ஜோதிமாணிக்கம் பெருமாள் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளிலும் சுவாமியை வழிபடுவதோடு பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இந்த புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை அன்று நடந்த திருவிழாவில் 1.000 க்கும் மேற்பட்ட ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளிகள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை டி.சுப்புலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அழகுமணி செல்லப்பாண்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகேந்திரன், வெற்றிவேல், கார்த்திகேயன், நாகராஜ், பாண்டி, என்.பெருமாள்ராஜ், ராதாகிருஷ்ணன், செல்லப்பாண்டி, கே.பெருமாள் ராஜா ரகுவரன், செல்லப்பாண்டி பிரதர்ஸ் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த கோவிலில் பரம்பரை பூசாரியாக ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES